Tamilnadu
காதலியுடன் போனில் பேசும்போது கிணற்றில் விழுந்த காதலன்.. 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷிக். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆஷிக் நூற்பாலையில் இருக்கும் கிணறு அருகே நடந்து கொண்டு காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறுதலாகக் கிணற்றில் விழுந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் இவர் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை. மேலும் நீண்ட நேரமாகக் காப்பாற்றக் கோரி அலறிய இவரின் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் இரவு முழுவதும் கிணற்றிலேயே தத்தளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் காலையில் கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறதே என சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது ஆஷிக் கிணற்றிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆஷிக்கை கிணற்றிலிருந்து மீட்டனர். அவருக்குக் கையில் முறிவு ஏற்பட்டிருந்ததால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!
-
பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!
-
“மாம்பழ விவசாயிகள் நலனை உறுதி செய்ய வேண்டும்!” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!