Tamilnadu
மது போதையில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த சகோதரர்கள்: தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். ஆட்டோ ஓட்டுநரான இவரும். உறவினர் ஆறுமுகம் என்பவரும் நேற்று முன்தினம் திம்மையார் காலனி பகுதியில் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சிவபெருமாளின் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தியுள்ளார் ஆறுமுகம். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்நேரத்தில் அங்கிருந்து ஆறுமுகத்தின் தம்பி சொர்ணராஜி சிவபெருமாளைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்த சிவபெருமாளைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் இருவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு சிவபெருமாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சிவபெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி தன்பாகம் போலிஸார் ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!