Tamilnadu
“பல ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்த கணித ஆசிரியர்” : தலைமை ஆசிரியரிடம் 23 பள்ளி மாணவிகள் புகார்!
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் சேகர். 52 வயதாகும் அரசுப் பள்ளி ஆசிரியரான சேகர் மீது அடிக்கடி பாலியல் புகார் வந்துள்ளது. சில நேரங்கள் புகார்கள் அதிகம் வரும்போது மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு பிரச்சனை வெளிவராதபடி பார்த்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் சேகர்.
பின்னர் சில மாதங்கள் தன்னுடைய சேட்டையை நிறுத்திவிட்டதாக நாடகமாடிவிட்டு பின்னர் மீண்டும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், வகுப்பிற்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரைத் தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
மாணவி வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்தால், தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனையடுத்து இதேபோல் பாலியல் சீண்டலுக்கு உள்ளான மாணவிகளுக்கு இந்த விஷயம் தெரியவே ஆசிரியர் சேகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி திரண்டனர். இதனையடுத்து 23 பள்ளி மாணவிகள், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
மாணவிகளின் புகாரைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர், இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர் சேகர் மீதான குற்றச்ச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சேகரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!
-
விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! : எங்கு? எப்போது?
-
“கழக அரசுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலைப் போலவே ஆழமானது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி 4 தொழிலாளர் விரோத சட்டங்கள் அமல் : ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகம்!
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!