Tamilnadu
ஒருபக்கம் அமைச்சராக சிக்ஸர்... இன்னொரு பக்கம் பிஎச்.டி மாணவர்... அசத்தும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்தக்கூடியவர். “அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்யவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள் என சுற்றிச்சுழன்று பணியாற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நடந்துமுடிந்த சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிகமான கேள்விகளுக்கு பதிலளித்து முதலிடம் பிடித்தார்.
முதல் முறை அமைச்சராகி செயல்பாடுகளில் அசத்தும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தற்போது திருச்சி தேசியக் கல்லூரியில் உடற்கல்வித்துறையில் பிஎச்.டி ஆய்வுப் படிப்பினைத் தொடங்கியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு உடற்கல்வியியல் தொடர்புடைய திறனை மேம்படுத்துதல்,மாணவர்களின் பங்கேற்பு, கற்றலில் ஈடுபாட்டை அதிகரிப்பது குறித்த தன்னுடைய பிஎச்.டி ஆய்வின் ஆராய்ச்சிக்கான முன்வடிவத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், மற்றும் தேசியக் கல்லூரி முதல்வர் சுந்தரராமன் உள்ளிட்டோரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை பணிக்காக தன்னுடைய ஆய்வினை குழந்தைகளுக்காக அர்ப்பணித்து பிஎச்.டி படிப்பினை தொடங்கியுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!