Tamilnadu

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. கே.சி.வீரமணிக்கு ஆப்பு? - ஒரே நேரத்தில் 28 இடங்களில் அதிரடி சோதனை!

2016-21ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.28.78 கோடிக்கு சொத்துக்களை சேர்த்ததாக கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கையில், 2016-2021 ஆண்டு காலத்தில் வருமானத்தை விட 654% சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடங்கள் வருமாறு:

திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்

ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்

ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள கே.சி.வீரமணி வீடு

பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள கே.சி.வீரமணியின் மற்றொரு வீடு

கே.சி வீரமணிக்கு சொந்தமான கல்லூரி

கே.சி.வீரமணியின் அண்ணன் காமராஜ் வீடு

கே.சி.வீரமணியின் அண்ணன் அழகிரி வீடு

கே.சி.வீரமணியின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி

தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு

திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு

ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள மகளிர் அணி தலைவியான சாந்தி வீடு

ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்

நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா வீடு

நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் காமராஜ் என்பவரது வீடு

நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு

ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கர்ணல் வீடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கே.சி.வீரமணியின் உறவினர் வீடுகள்

சென்னை சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Also Read: சிக்கிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் - கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!