Tamilnadu
நடு ரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட ரவுடி வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல் - மயிலையில் பரபரப்பு!
சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவை சேர்ந்தவர் உருளை கோபி (எ) கோபி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் மயிலாப்பூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட மயிலாப்பூர் சிவகுமாரின் கூட்டாளி.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அப்பு தெருவில் உள்ள ஆவின் பார்லர் அருகே இருந்துள்ளார். அப்பொழுது இரண்டு வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று உருளை கோபியை ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் உருளை கோவை தலை சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலிஸார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இறந்த ஒருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
-
யோக்கியர் வேஷம் போடும் பழனிசாமி : அ.தி.மு.க ஆட்சி ஊழலை மீண்டும் நினைவூட்டும் முரசொலி!