Tamilnadu

“கலைஞர் பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : துரைமுருகன் புகழாரம்!

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தி.மு.க தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் இணைந்த தி.மு.கவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

பெரியார் விருதை மிசா பி.மதிவாணனுக்கும், பேரறிஞர் அண்ணா விருதை எல்.கே.மூக்கையாவிற்கும், கலைஞர் விருதை கும்மிடிபூண்டி கீ.வேணுவிற்கும், பாவேந்தர் விருதை வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருதை பா.மு.முபாரக்கிற்கு முதலமைச்சர் வழங்கினார்.

விழாவில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அண்ணாவிடம் கலைஞர் கேட்டுப் பெற்ற இதயத்தை, அவரிடம் கேட்காமலேயே தளபதி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்றும், இந்தியாவின் எட்டு திக்கிலும் நமது முதலமைச்சர் பற்றியே மக்கள் பேசுவதாக கூறினார்.

கலைஞர் முதலமைச்சரான பின்பு பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். மேலும் விருது பெற்றவர்கள் போன்ற பலர் இருப்பதால், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது எனக்கூறினார்.