Tamilnadu
தாத்தா, பாட்டியை வீட்டோடு எரித்து கொலை செய்த பேரன்: சேலத்தில் கொடூர சம்பவம்!
சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி காசியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகன் குமாரின் மகன் ரிஷிவந்தை, உறவினருடன் ஒப்பிட்டுப் பேசி கண்டித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ரிஷிவந்த் நேற்று நள்ளிரவில் தாத்தா, பாட்டி தூக்கிக் கொண்டிருந்தபோது குடிசை வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தீயில் கருகிய வயதான தம்பதியினரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் ரிஷிவந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாத்தா, பாட்டியைத் தீவைத்து எரித்து பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!