Tamilnadu

ஆரணி சிறுமி பலி எதிரொலி: இறைச்சி வேட்டையில் இறங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் - சேலத்தில் அதிரடி ரெய்டு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இறைச்சி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில் மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி ஆய்வு உணவகங்களில் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று சேலம் ஐந்து ரோடு, 4 ரோடு புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சேலத்தில் பிரபல அசைவ உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 60 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்து அழித்தனர். அதனைத் தொடர்ந்து உணவகங்களில் உள்ள சமையல் செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மேலும் அசைவ உணவில் கலர் பொடிகள் சேர்க்கப்படுகிறது என்ற ஆய்வை மேற்கொண்டு கலர்பொடி கொண்டு உருவாக்கப்பட்ட உணவினை அகற்றும்படி உத்தரவிட்டனர்.

மேலும் இது போன்ற வாடிக்கையாளர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கலர் பவுடர் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Also Read: சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி.. 3 பேர் கவலைக்கிடம்.. ஆரணியில் அதிர்ச்சி சம்பவம் - ஹோட்டலுக்கு சீல்!