Tamilnadu
“ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அடி” : ‘தினகரன்’ நாளேடு பாராட்டு!
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. இத்தீர்மானம் ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலினின் அடுத்த அடியாக அமைய வேண்டும் என ‘தினகரன்’ நாளேடு 9.9.2021 தேதியிட்ட இதழில் “அடுத்த அடி” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அது வருமாறு :-
குடியுரிமை திருத்த சட்டம் மக்களவையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதியும், மாநிலங்களவையில் 2019ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியும் நிறைவேறியது. டிசம்பர் 12ம் தேதி இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்திருத்தம் இந்தியாவை பிளவுப்படுத்தும் என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்திருத்தத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், எதையுமே காதில் கொள்ளாமல் ஒன்றிய பாஜ அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்துள்ளது.
பாஜவுக்கு பல்லக்கு தூக்கிவரும் அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும், பாமக உறுப்பினர் ஒருவரும் மாநிலங்களவையில் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற ஆதரவு அளித்து இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கோட்பாட்டிற்கும் எதிராக செயல்பட்டனர். ஆனால், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் திமுகவோ ஆரம்பம் முதலே இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்கூட இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுக வலியுறுத்தியது. இதற்கு அதிமுக அரசு செவிமடுக்கவில்லை.
ஆனால், மக்களின் பேராதரவுடன் தமிழக முதல்வராக அரியணை ஏறியது முதல் ஒவ்வொரு அடியையும் மக்கள் நலனுக்காக எடுத்து வரும் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று தமிழக சட்டபேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, தான் ஒரு மக்கள் முதல்வர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்திருத்தத்தால் இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நடைபெறும் நாடான இ்ந்தியாவில் இந்த சட்டத்திருத்தம் தேவையற்றது. ரத்து செய்யப்படவேண்டும்’’ என அவர் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசி வேற்றுமையில் இணைந்து வாழும் மக்கள் மனதிலும், மதம், இனம், மொழி வேறுபட்டாலும் ஒற்றுமையோடு வாழ விரும்பும் மக்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.
அகதிகளாக நம் நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மதம், இனம், நாடு ரீதியாக பாகுபடுத்தி பார்ப்பது இந்திய நாட்டின் கோட்பாட்டிற்கு எதிரானதாக கருதி சட்டத்திருத்தத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக அவ்வப்போது அடி கொடுத்து வருகிறார். ஏற்கனவே தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அவருக்கு வெற்றிமேல் வெற்றிதான் கிடைத்துள்ளது. அந்த வகையில் அவரது தலைமையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ள இந்த தீர்மானமும் ஒன்றிய அரசுக்கு அடுத்த அடியாக அமைய வேண்டும். அமையும்.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!