Tamilnadu
பெற்றோர்களே எச்சரிக்கை.. சாக்லேட் என நினைத்து மாத்திரையை சாப்பிட்ட 2 வயது குழந்தை பரிதாப பலி !
செங்கல்பட்டு மாவட்டம், தோட்ட நாவல் பகுதியைச் சேர்ந்தவர்கள் அசோக் - நந்தினி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் லித்வின் என்ற குழந்தைக்குக் கடந்த 3ம் தேதி திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சேர்ந்தனர்.
அப்போதும், குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மருத்துவர்கள் ஏன் குழந்தைக்கு இப்படி ஆனது என பரிசோதனை செய்தனர். அப்போதுதான் குழந்தை சாக்லேட் என நினைத்து பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!