Tamilnadu
பணத்துக்காக மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை.. வாலிபரின் கொடூரச் செயல்!
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாராயி. மூதாட்டியான இவர் கணவரை இழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மூதாட்டியின் வீட்டின் கதவு அதிக நேரம் ஆகியும் திறக்கப்படாததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.
ஆனால், மூதாட்டி கதவைத் திறக்காததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சடலமாக இருந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை குறித்து மூதாட்டியின் வீட்டில் வசித்து வந்த காளிதாஸ் என்பரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது நான்தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த பணத்தைத் திருட முயற்சி செய்தேன்.
அப்போது அவர் திடீரென எழுந்துவிட்டார். இதனால் அவரை அருகிலிருந்த சிறிய கல்லை கொண்டு தலையில் அடித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் போலிஸார் அவரை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்