Tamilnadu
“14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் நூலகம்” : அமைச்சர் மஸ்தானின் 17 அசத்தல் அறிவிப்புகள்!
சட்டப்பேரவையில் இன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சிறுபான்மையினர் நல விடுதி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் பல்வகைச் செலவின தொகை இருமடங்காக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
தேனி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் விடுதிக்கு சொந்தக் கட்டடம் 3 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா, மகாவீரர் ஜெயந்தி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் பயனடையும் பொருட்டு அவர் வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் 4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் துவங்கப்படும்.
வக்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாய தொகை விகிதத்திற்கு ஏற்ப வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.
தமிழ்நாடு வக்பு வாரியம் தனது பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வகுப்புக்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு உட்பட்ட சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மேற்கு சரக அலுவலகங்களுக்கு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணி தங்களுடன் கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவல கங்கள் ஒரு கோடியே 25 லட்சத்து 5,000 ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதை போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
Also Read
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
-
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!