Tamilnadu
காதலுக்கு இடைஞ்சல்: சொந்த மகனை பிரம்பால் அடித்து கொலை.. தாயின் வெறிச்செயல் - கிருஷ்ணகிரியில் கொடூரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டிலேட்டி கிராமத்தில் மல்லேஸ்வரன் மலைப்பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற போலிஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சிறுவன் யார் என்ற அடையாளம் தெரியாததால், கர்நாடகா, ஆந்திரா போலிஸாருக்கு சிறுவன் குறித்த தகவலை கிருஷ்ணகிரி போலிஸார் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, தனது பேரன் ராகுல் காணவில்லை என பெங்களூருவைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் போலிஸில் புகார் அளித்திருந்தார். பிறகு கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட இருந்த சிறுவன் தான் காணாமல்போன ராகுல் என்பதை போலிஸார் உறுதிப்படுத்தினர்.
பின்னர், சிறுவன் ராகுலை அவரின் தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார், மற்றொரு காதலி சிந்து ஆகியோர் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்தது போலியார் விசாரணையில் தெரியவந்தது. பிறகு மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தகவல் வெளிவந்துள்ளது. இதில் நதியா மற்றும் சுனில்குமார் ஆகியோர் இருவருக்கும் ராகுல் இடையூறாக இருந்துள்ளார். இதனால் சிறுவனை நதியா பிரம்பால் அடித்தும், சூடு வைத்தும் சித்தரவதை செய்துவந்துள்ளார்.
பின்னர் கடந்த பிப்ரவரி 7ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராகுலை சுனில்குமார் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு மற்றொரு காதலி சிந்துவுடன் சிறுவனின் உடலை காரில் எடுத்து வந்து கிருஷ்ணகிரி எல்லைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?