Tamilnadu
“ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடைபெற்றது” : கொடநாடு அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு!
கொடநாடுகொலை கொள்ளை சம்பவ வழக்கை அவசர அவசரமாக முடிக்க அப்போதைய அ.தி.மு.க அரசு தீவிரம் காட்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இவ்வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என போலிஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை பரிசீலித்த நீதிபதி வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மேற்பார்வையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் புலன் விசாரணை 5 குழுக்கள் அமைக்கப்பட்டு மிகத் தீவிரமாக, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நடைபெறும் விசாரணையில், கொடநாடு கொலை கொள்ளை குறித்த பல்வேறு ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், இருப்பினும் தனிப்படை போலிஸார் அழிந்துவரும் ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப ரீதியாகவும், மொபைல் போன் அழைப்புகள், சிக்னல்கள் குறித்து, தனிப்படை போலிஸார் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில், என முன்னாள் கொடநாடு ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான கொடநாடு பகுதியை சேர்ந்த பொன்தோஸ் பலவேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக என முன்னாள் கொடநாடு ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான கொடநாடு பகுதியை சேர்ந்த பொன்தோஸ் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது கொடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது பணியில் இருந்த எஸ்டேட் ஊழியர்கள் பார்த்ததால் கொள்ளையர்கள் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அப்போதிருந்த காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸாரை விலகியது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொலை கொள்ளை சம்பவத்தில் பெரிய பெரிய ரகசியங்கள் மூடிமறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!