Tamilnadu
தந்தை இறந்த 6 மாதத்தில் மகளும் தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல் - என்ன காரணம்?
சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கரிஸ்மா. மென்பொறியாளரான இவர் கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் இவரது தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், வீடு திரும்பிய தாய் வெகு நேரமாக மகள் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கரிஸ்மா தூக்கிட்டு இறந்த கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கரிஸ்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்ததிலிருந்தே கரிஸ்மா மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலிசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!