Tamilnadu
“மேகம் கருக்கயிலே...” : அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலைதான் - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் சேலான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் தென்மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 7ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!