Tamilnadu
“மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே பொது வெளியில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை” : அமைச்சர் பேட்டி!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 143 பேருக்கு 31 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திர இரு சக்கர வாகனம் உள்பட அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜய ராணி வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “நலத்திட்ட உதவியானது சாலை விபத்தில் மரணமடைந்தோர், சாலை விபத்தில் காயம் அடைந்தோர், தையல் பயிற்சி முடித்தோர், விதவை உதவி தொகை ஆகிவையை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.
சென்னை மாவட்ட சார்பில் 3 வது முறையாக நலத்திட்டம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மனு கொடுத்து காத்திருந்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள் தகுதி உள்ளவர்களுக்கு தாமதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்து அறநிலைத்துறை சார்ந்த இடங்களை சமுக விரோதிகள், ஆக்கிரப்பாளர்கள் பயன்படுத்த முடியாது சூழல் உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக பொது இடங்களில் வினாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலை வைக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்த கருத்திற்கு மிரட்டல் உருட்டளுக்கு பயப்படும் ஆட்சி இல்லை. மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே ஆட்சி நடைப்பெற்று வருகிறது என தெரிவித்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!