Tamilnadu
உத்தரகாண்டில் ஒரு செல்லூர் ராஜூ : "மழையை கட்டுப்படுத்த APP இருக்கு" - பா.ஜ.க அமைச்சரின் ‘குபீர்’ பேச்சு!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, நீர் ஆவியாதலைத் தடுக்கிறேன் எனக் கூறி தெர்மாகோலை வைத்து காமெடி செய்தார். இந்த நிகழ்வை அடுத்து இவரைத் ‘தெர்மாகோல் விஞ்ஞானி’ என்ற பலரும் கிண்டலாக அழைத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் தெர்மாகோல் விஞ்ஞானியையே மிஞ்சிவிட்டார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் தன்சிங் ராவத். மழையை கட்டுப்படுத்த செயலி கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக கூறி காமெடி செய்துள்ளார் இவர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய பா.ஜ.க அமைச்சர் தன்சிங் ராவத், “இப்போது ஒரு செயலி வந்துள்ளது. இதன் மூலம் கனமழையால் உயிர் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடத்தில் மழையின் தீவிரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
நான் விரைவில் இதுகுறித்து விளக்கக்காட்சி அளிக்கிறேன்.இந்த செயலி நாட்டின் பல மாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பா.ஜ.க அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
முன்கூட்டியே மழையின் அளவை அறிய ஏற்கெனவே கருவிகள் இருக்கின்றன. ஆனால், குழாயில் வரும் தண்ணீரை திறந்து விடுவதையும் பின்னர் மூடுவதையும் போல “ஒரு இடத்தில் பெய்யும் மழையைக் குறைக்கவும், கூட்டவும் செயலி கண்டுபிடித்துள்ளோம்” என்று கூறியிருப்பதைத்தான் ஏற்க முடியவில்லை என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!