Tamilnadu
5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறப்பு : ஆர்வமுடன் கல்லூரிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் !
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் பெருமளவு குறைந்ததையடுத்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.
கல்லூரிகளை பொருத்தவரை சென்னை மாநிலக் கல்லூரியில் அனைத்து ஏற்பாடுகளும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வரும் இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும். கல்லூரி நேரம் காலை 8.30 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை செயல்படுவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. அதன்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் செலுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்ற நிலையில் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!