Tamilnadu
“மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் தியாகத்தையும் போற்றிடுவோம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பூலித்தேவரின் தேசப்பற்றை நமது நெஞ்சில் ஏந்தி, இந்த நாட்டு ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் தொடர்ந்து பணியாற்றுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு :-
“ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளான இன்று (1.9.2021) அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்வதில் பெருமிதம் அடைகிறேன்.
விடுதலைக்கான வேட்கை தமிழ்நாட்டிலிருந்துதான் முதலில் கிளம்பிற்று என்பதற்கு பூலித்தேவரின் விடுதலை போராட்டமே ஆதாரமாக விளங்குகிறது. இன்றைக்கு நாட்டிற்கு எத்தகையை இடையூறுகள் - எந்த திசையில் இருந்து வந்தாலும், நாம் நாட்டின் பக்கம் உறுதியுடன் நின்று, தேசப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் மாவீரர் பூலித்தேவர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் காட்டிய வழிதான்!
விடுதலை வீரர் பூலித்தேவரால் - நெற்கட்டும்செவல் - தமிழ்நாடு மட்டுமல்ல- இந்த நாடே பெருமையடைகிறது. பூலித்தேவரின் தேசப்பற்றை நமது நெஞ்சில் ஏந்தி, இந்த நாட்டு ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் தொடர்ந்து பணியாற்றுவோம்!
மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் - துணிவையும் - தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! தமிழ்நாட்டின் தன்மானச் சுடரொளியை என்றென்றும் உயர்த்திப் பிடித்திடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!