Tamilnadu
குடிபோதையில் தகராறு.. தட்டிக்கேட்ட பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம் - சேலத்தில் நடந்த பயங்கரம்!
சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியதூரை பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - விஜயா தம்பதி. இவரது வீட்டிற்கு அருகே கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டின் அருகே நின்று கூட்டலிட்டுள்ளார்.
அப்போது விஜயா இதனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் விஜயாவை அவதூறாக பேசியுள்ளார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது தகராறின்போது கோவிந்தராஜ், கோகுல்ராஜை கல்லால் தாக்க முயன்றபோது அதை தடுக்க முயன்ற விஜயாவின் தலையில் கல் பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!