Tamilnadu
பெற்றக் குழந்தையை துன்புறுத்தியது ஏன்? வாக்குமூலம் அளித்த துளசி.. அதிர்ச்சியில் உறைந்த போலிஸ்!
ஈன்றெடுத்த தாயே தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ஆந்திராவில் இருந்த சம்மந்தப்பட்ட துளசி என்ற பெண்ணை செஞ்சி போலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான துளசியை செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. அதில், தனக்கு சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருடான திருமணத்தை மீறிய உறவு இருப்பதும், கணவர் வடிவழகன் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே குழந்தையை துன்புறுத்தியதாகவும் துளசி தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, கள்ளக்காதலனான பிரேம்குமாரை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை சென்னை விரைந்திருக்கிறது. முன்னதாக துளசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தாய் வீட்டினர் கூறியதை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவர் அப்பெண்ணை சோதித்து பார்த்ததில் அவருக்கு மனநல பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.
பரிசோதனை முடிவு வந்ததை அடுத்து செஞ்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு துளசி சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!