Tamilnadu
குழந்தை தாக்கப்பட காரணமான தாயின் காதலனை பிடிக்க விரைந்தது தனிப்படை - போலிஸார் தகவல்!
செஞ்சியை அடுத்த மணலப்பாடி மதுரா மோட்டூர்கிராமத்தில் வசித்து வரும் வடிவழகனின்இரண்டாவது மகன் பிரதீப்பை அவரது தாய் துளசி கொடூரமாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து போலிஸார் துளசியை ஆந்திராவில் நேற்று கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள துளசி விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.15 மணிக்குதனிப்படை போலிஸார் அழைத்துவந்தனர். சத்தியமங்களம் காவல் நிலையத்தில் செஞ்சி டி.எஸ்.பி தலைமையில் துளசியிடம் மகளிர் உள்ளிட்ட போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தாய் துளசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, துளசியும் அவரது கணவரும் சென்னையில் வசித்தபோது பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தபழக்கம் வீடியோகால் மூலமாக காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் துளசியிடம் ஆசை வார்த்தையில் பேசிய பிரேம்குமார், கணவரை விட்டுவிட்டு வரம் படி கூறியுள்ளார். அப்படி வந்தபிறகு துளசியை திருமணம் செய்துகொள்வதாகவும் பிரேம்குமார் கூறியுள்ளான்.
அதுமட்டுமல்லாது, வீடியோ காலில் பேசும் போது துளசியிடம் பெரிய மகன் உன்னை போன்று இருப்பதாகவும், இளையமகன் துளசியின் கணவரை போல் இருப்பதாகவும், மேலும் குறைமாதத்தில் பிறந்த இரண்டாவது மகனை அடித்து துன்புறுத்த வலியுறுத்தியதாகவும், அதனை வீடியோவாக எடுத்து எனக்கு அனுப்பினால் தான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளான்.
இதன்படியே துளசியும் தனது இளைய மகனை அடித்து அதனை வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் துளசிக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது காதலன் பிரேம்குமாரை போலிஸார் கைது செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பிரேம்குமார் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலிஸார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், பிரேம்குமார் செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என வருவதாகவும் கூறப்பட்டுகிறது. விரைவில் போலிஸார் பிரேம்குமாரை
Also Read
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!