Tamilnadu
நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் உலா.. கார் கண்ணாடிகளை உடைத்து துவம்சம் செய்யும் சைக்கோ; சென்னையில் பயங்கரம்!
நிர்வாண கோலத்தில் இரவு முழுவதும் சுற்றி சுற்றி கார் கண்ணாடிகளை உடைக்கும் சைக்கோ நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஜெ.ஜெ.தெரு, அம்புஜாம்பாள் தெரு ஆகிய பகுதிகளில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரை நிர்வாண கோலத்தில் சுற்றித்திரியும் சைக்கோ நபர் அப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இது தொடர்பாக அந்த பகுதியில் வசித்து வரக்கூடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமதி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் உடலில் ஒட்டு துணி இல்லாமல் வரக்கூடிய அந்த சைக்கோ சாலையில் இருக்கக்கூடிய கற்களை எடுத்து கார் கண்ணாடிகளை உடைத்து விடுவதாகவும் அதைப் பார்க்கும் பொதுமக்கள் யாராவது தட்டி கேட்கலாம் என வந்தால் கல்லை எடுத்து அவர்களையும் விரட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியிருக்கிறது. சிசிடிவி காட்சிகளை பார்க்கிறபோது சைக்கோவின் அட்டகாசம் அளவை மீறி போவதை காணமுடிகிறது. கார் கண்ணாடிகள் மட்டுமல்லாது தட்டிக் கேட்க வரும் நபர்களை தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!