Tamilnadu
பெண் பெயரில் Fake ID: வாட்ஸ் அப்பில் ஆபாச பேச்சில் ஈடுபட்ட வாலிபர் - போலிஸில் சிக்கியது எப்படி?
இராமநாதபுரம் அருகே கடற்கரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி அவரின் தோழிகளின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச தகவல்கள் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் ஒருவர் தனது பள்ளித் தோழிகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
இதையடுத்து வாட்ஸ் ஆப்பில் பேசுவது தனது தோழியில்லை என தெரியவந்தது. பின்னர் அந்தப் பெண் தன்னிடம் பேசிய நபரின் எண்ணைக் கொண்டு சமூகவலைத்தளங்களில் தேடியுள்ளார்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த பீம்ராவ் என்ற வாலிபர்தான் ஆபாசமாக பேசியது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பின்னர், போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, இளம்பெண்ணின் பெயரில், பெண்களுக்கு ஆபாசத் தகவல் அனுப்பியது பீம்ராவ்தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலிஸார் செங்கம் விரைந்து பீம்ராவை கைது செய்து ராமநாதபுரம் அழைத்து வந்தனர்.
பிறகு, பீம்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரின் செல்போனில் இருந்த தகவல்களையும் போலிஸார் அழித்துள்ளனர். இளம் பெண்ணின் பெயரில் தோழிகளுக்கு ஆபாசமாகத் தகவல் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!