Tamilnadu
"தற்போதைய நிதிநெருக்கடிக்கு அ.தி.மு.கவின் மிகமோசமான ஆட்சியே காரணம்" : கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் வெற்று அரசாக இருந்த அ.தி.மு.க என்ன செய்தது என்பதை நினைத்துப்பார்த்து தி.மு.க அரசை விமர்சிக்க வேண்டும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் தி.மு.க அரசு விவசாயிகள் மீது தனிக்கவனம் செலுத்தியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது.
தி.மு.க அரசின் 100 நாள் சாதனையில் கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டினை யானைப்பசிக்கு சோளப்பொறி என்று அ.தி.மு.க விமர்சனம் செய்துள்ளது.
பத்து ஆண்டுகள் வெற்று அரசை நடத்திய அ.தி.மு.க, தங்களின் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதைப் பரிசீலித்து தி.மு.கவை விமர்சிக்க வேண்டும். அ.தி.மு.க அரசின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமையை தற்போது தி.மு.க அரசு அனுபவித்து வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் தலையில் சுமையை ஏற்றும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்கும் என்ற நம்பிக்கை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!