Tamilnadu
“ஆடி மாதம் பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவி” : கணவன் எடுத்த விபரீத முடிவு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆடி மாதத்தை முன்னிட்டு மனைவி ரேணுகாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் செல்வம் இருந்துள்ளார்.
பின்னர், கடந்த வாரம் மனைவியைப் பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார் செல்வம். அப்போது மனைவியை எனது வீட்டிற்கு அனுப்பி விடுங்கள், என்னால் தனியாக இருக்க முடியவில்லை என மாமியாரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் இரு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்வம், தனது செல்போனில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இதில் மனைவியைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், செல்வம் தூக்குப்போட்டபோது கயிறு இரண்டு முறை அறுந்து விழுந்துள்ளது. இருப்பினும் அவர் மூன்றாவது முறையாக முயற்சி செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அனைத்தும் அவரது செல்போன் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !