Tamilnadu
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மக்களுக்கு அப்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.
இதையடுத்து தேர்தல் வெற்றி பெற்று முதலமைச்சாரக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிதில் இருந்தே தொடர்ச்சியாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
இதனடிப்படையில்,இன்றைய சட்டப்பேரவையில் "உழவர் நலனின்றி உழவுத்தொழில் இல்லை' என்ற திருவள்ளுவரின் வேளாண்மை குறித்த விளக்கத்தை மேற்கொள் கோட்டி 273 பக்கங்கள் கொண்ட வேளாண்மை நிதிநிலையை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்றைய சட்டட்பபேரவையில் 2021 -2021ம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!