Tamilnadu

“இல்லத்தரசிகளுக்கு ரூ.1000.. பேறுகால விடுப்பு அதிகரிப்பு”: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க அரசு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : -

இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை 1-7-2021 முதல் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும்.

பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 1-4-2022 முதல் வழங்கப்படும்.

உரிமைத் தொகை வழங்கல் திட்டம் பற்றிய அம்சங்கள்

இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும். எனவே குடும்ப அட்டையில் உள்ள இல்லத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.

இத்திட்டம் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும். பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். கொரோனா பெருந்தொற்றின்போது குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது அதுபற்றி விமர்சனங்கள் எழுந்தன.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி.. பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க அரசின் பட்ஜெட்!