Tamilnadu

“காவல்துறைக்கு ரூ.8,930 கோடி நிதி ஒதுக்கீடு.. குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை” : நிதியமைச்சர் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

காவல்துறையில் காலியாக உள்ள 14,317 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல் படைகளில் ஒன்றாக தமிழ்நாடு காவல் படையை உருவாக்குவதே அரசின் இலக்கு.

மனிதவளம் மற்றும் வாகனங்கள் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் காவல்துறைக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

பெரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையிலும், உரிய தண்டனை பெற்றுத்தரும் வகையிலும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு கவனம் செலுத்து ஏதுவான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாது காவல்துறைக்கு மொத்தம் 8.930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: “அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு!