Tamilnadu

“ஊழல் சாம்ராஜ்யத்தின் ராஜா” : A-1 எஸ்.பி.வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் சொல்வதென்ன? - ‘பகீர்’ தகவல்!

முதல் தகவல் அறிக்கையில், ஏ-1 குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது சகோதரர் அன்பரசன். இவர் செந்தில் அண்ட் கோ ஷேர் ஹோல்டர், ஸ்ரீ மகா கனபதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பார்ட்னராக உள்ளார்.

ஏ-3யாக கே.சி.பி எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கே.சி.பி எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் லிமி டெட், காண்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், வைடூர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.சந்திர பிரகாஷ் ஏ-4 ஆக இணைக்கப்பட்டுள்ளார்.

இதே நிறுவனங்களின் பங்குதாரர் மற்றும் இயக்குநர் ஆர்.சந்திரசேகர் ஏ-5ஆக இணைக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவையின் கட்டுமானம் மற்றும் வழங்கல் விநியோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னைச் சார்ந்தவர்களுக்காக பெரிய அளவில் ஆதாயம் தேடியுள்ளார் என்றும் இந்தக் கருத்துக்காட்சிப் பட்டியலில் அவரது சகோதரர் அன்பரசன் உட்பட அவர்களது நிறுவனங்களான பி.செந்தில் கோ., கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்., இன்விக்டா மெடி டெக்லிமிடெட் (இப்போது காண்ஸ்ட்ரோனிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இன்ப்ரா லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன்ஸ்பிரைவேட் லிமிடெட்., கான்ஸ்ட்ரோமல் கூட்ஸ்பிரைவேட் லிமிடெட்., ஏ.சி.இ டெக் மெஷினரி கூறுகள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்கள் (பி) லிமிடெட், வைதூர்யா ஹோட்டல்ஸ் (பி) லிமி டெட், ஏ.ஆர்.இ.எஸ். பி.இ. இன்ஃப்ரா (பி) லிமிடெட், ஸ்ரீ மகாகணபதி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட், ஆலம்கோல்ட் டயமண்ட் (பி)லிமிடெட், வர்தன் உள்கட்டமைப்பு., காண்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா., மெட்ராஸ் இன்ஃப்ரா., ஓசூர் பில்டர்ஸ்., டூலீஃப் மீடியா., எஸ்.பி. பில்டர்ஸ்., சி.ஆர். கண்ட்ஸ்ரக்ஷ்ன்ஸ் மற்றும் இவற்றில் தொடர்புடைய ராபர்ட் ராஜா, சந்திரபிரகாஷ் ஆகியோரும் இதில் அடக்கம்.

மேலும் இந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவதற்காக முன்பின் தெரியாத சில அரசு அதிகாரிகள் ஏ-1 எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கால் கண்மூடித் தனமாக சட்டத்தை மீறியுள்ளனர். அதனால் முன்னாள் அமைச்சர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: லஞ்ச ஒழிப்பு சோதனை... கம்பி நீட்டிய முன்னாள் அமைச்சர்கள்: சோகத்தில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள்!