Tamilnadu
“செல்ஃபி மோகம்.. கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்” : போராடி மீட்ட போலிஸார் !
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் இன்று காலை நேப்பியர் பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை மிகவும் அழகாக இருந்ததால், பாலத்திலிருந்து தனது செல்போனில் செல்ஃபி எடுக்க நினைத்துள்ளார்.
அதன்படி, கார்த்தி தனது செல்போனில் பாலத்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அண்ணா சதுக்கம் போலிஸார் சில மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கார்த்திக்கை மீட்டனர்.
பின்னர், அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் கூவத்தில் விழுந்ததை உடனடியாக தகவல் கொடுத்த நபரை போலிஸார் பாராட்டினர்.
Also Read
-
மதுராந்தகத்தில் ஒப்பாரி வைத்த ஆதவ் அர்ஜுனா: தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் அதிரடி!
-
த.வெ.கவுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லை : நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் - ஆர்.எஸ்.பாரதி புகார் மனு!
-
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால் : தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!
-
“குடமுழுக்கைக் கூட ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லாத த.வெ.க அரசு” : முரசொலி தலையங்கம் விளாசல்!