Tamilnadu
தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை: அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரைக் கைது செய்து விசாரணை !
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் சண்முகம். வயது 56, சண்முகம் மதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், தி.மு.க சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
சண்முகம் சாலை காண்ட்ராக்ட் பணிகள் எடுத்து செய்வது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகள் செய்து வந்துள்ளார். சாலை காண்ட்ராக்ட் பணிகளில் சண்முகத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சண்முகம் வாலாஜாபாத் பகுதியில் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சண்முகம் சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு தினமும் காலையில் வந்து விட்டு இரவு ஆகும் போது வாலாஜாபாத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 9,30 மணி அளவில் சண்முகம் மதூர் கிராமத்தில் இருந்து வாலாஜாபாத் வீட்டிற்கு செல்லும் போது, மதூர் பெட்ரோல் பங்க் அருகாமையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு முகத்தில் பலமாகத் தாக்கி, கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய மர்ம கும்பல் திருமுக்கூடல் பகுதியில் இரும்பு ராடு மற்றும் இருசக்கர பல்சர் பைக்கை விட்டு விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் நேரில் பார்வையிட்டு கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று உள்ளதா என்ற கோணத்தில் அ.தி.மு.க குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்முகத்திற்கு சங்கரி என்ற மனைவியும், தினகரன், தமிழ் என்ற இரு மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!