Tamilnadu
“மாவீரன் அண்ணாமலையையே கர்நாடகாவுக்கு தூதுவராக அனுப்புவோம்” : தயாநிதி மாறன் கிண்டல்!
கர்நாடகாவுக்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மேகதாது அணையை கர்நாடக பா.ஜ.க அரசு கட்டியே தீருவோம் என அடம்பிடித்து வருகிறது. புதிதாக கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் இதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். கர்நாடக பா.ஜ.க அரசின் முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 5ல், தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தபோது, “நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடன். எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன்.” எனப் பேசியிருந்தார் அண்ணாமலை.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையில் கண் துடைப்புக்காகவே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், “கர்நாடகாவில் பா.ஜ.க அரசுதானே ஆள்கிறது? கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலை அங்கு சென்று மேகதாது அணை வேண்டாம் என பேசலாமே?
சுமுக தீர்வு காண கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!