Tamilnadu
“நகை வாங்குவது போல் நடித்து பல நகைகடைகளில் கைவரிசை” : CCTV காட்சிகள் மூலம் வசமாக சிக்கிக் கொண்ட தம்பதி!
சென்னை முகப்பேர் வளையாபதி சாலை உள்ள லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளர் ப்ரீத்தம் குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி கடையில் பணிபுரியும் கைலாஷ் என்பவர் வாடிக்கையாளரிடம் 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளைக் காண்பித்துள்ளார்.
அப்போது அந்த வாடிக்கையாளர் அதில் ஒரு நகையை தேர்வு செய்து, ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்து வருவதாகக் கூறி விட்டு நகைக்கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். பிறகு நீண்ட நேரமாக அவர் வரவில்லை. இதையடுத்து நகையைப் பரிசோதித்த போது, அதில் ஒரு நகை மட்டும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த வாடிக்கையாளர் பணம் எடுத்து வருவதாகக் கூறி விட்டு வெளியே செல்லும் நேரத்தில் ஒரு நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து நகைகடையின் உரிமையாளர் போலிஸில் புகார் கொடுத்தார்.
பின்னர் இதுதொடர்பாக ஜே.ஜே.நகர் காவல்துறையினர் சி.சி.டி.வி ஆய்வு செய்து தாட்சாயினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சந்திரகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். குறிப்பாக தாட்சாயினி மீது ஏற்கனவே ஆவடி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, பூக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக பல வழக்கு பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!