Tamilnadu
“மொழி தான் முதலில் முக்கியம்; இரண்டாவது தான் தேசம்” : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் நச்சுனு ஒரு பேட்டி!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்இசையில் “பெருங்காற்று” என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகவிழா சென்னை தி.நகரில் உள்ள அரங்கும் ஒன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ”சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் 12 மொழிகளில், பெருங்காற்றே என்ற பாடல் வடிவமைக்கிறது. மேலும் இந்த பாடலில் இந்தியாவின் 12 விளையாட்டு வீரர்கள் மற்றும் 12 நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
நாம் மொழிக்காக போராடி வென்றுள்ளோம். மொழியா? தேசமா? என்றால், எனக்கு என் மொழிதான் முக்கியம். என் மொழி தான் தாய்; இரண்டாவது தான் தேசம்” எனத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இந்த பேச்சுக்கு, பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!