Tamilnadu
பருவக்காற்று எதிரொலி: தமிழகத்தில் ஜூலை 31 வரை மிதமான மழை தொடரும்; சென்னையின் நிலை என்ன?
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 29.07.2021 & 30.07.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி), மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
31.07.2021 & 01.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
வங்க கடல் பகுதிகள்...
28.07.2021 முதல் 29.07.2021வரை: வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்...
28.07.2021 முதல் 01.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி வழங்கிடும் திட்டம் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
உலக மகளிர் உச்சி மாநாடு 2026 மற்றும் TNWESAFE திட்டம் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தரும்” : அமைச்சர் ரகுபதி உறுதி!