Tamilnadu
”தூர்வாரும் பணி தொடங்கியாச்சு; இனி கலங்க வேண்டாம்” -சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன அமைச்சர் K.N.நேரு
சென்னை தலைமை செயலகத்தில், நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
”கோயம்புத்தூர் , சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்ற தவறுகள் மற்றும் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் துறை வாரியாக புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் தண்ணீரை சுத்தப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னையில் 330 கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல சென்னையில் பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காத அளவிற்கு பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருகிறது.
நகராட்சி தேர்தலை பொருத்தவரை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு பின்பு தேர்தல் தேதியை முதல்வர் அறிவிப்பார்.”
எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!