Tamilnadu

நேற்று கழகம் அறிவித்தது... இன்று தன் பிறந்தநாள் போஸ்டரை அகற்றிய குளித்தலை எம்எல்ஏ: குவியும் பாராட்டு!

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிட வேண்டும் என்றும், மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என நேற்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அறிவிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும், சுவர்களின் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தொண்டர்கள் அகற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்தின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு இடங்களில் சுவர் போஸ்டர்களை தொண்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை அறிந்த மாணிக்கம் எம்எல்ஏ உடனே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அவரே போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று, ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் அவரை அங்கேயே இருந்தார். பின்னர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அவரின் ஆதரவாளர் உடனே அகற்றினர்.

இது குறித்து எம்.எல்.ஏ மாணிக்கம் கூறுகையில்," எனது பிறந்த நாளையொட்டி ஆதரவாளர்கள் பள்ளி சுவர்களின் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே போஸ்டரை அகற்ற வேண்டும் என கூறி அவர்களை எச்சரித்தேன்.

மேலும் இந்த சுவர்களின் போஸ்டர்கள் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு, சுவரிலிருந்த திருக்குறள் வாசகமெல்லாம் அழிந்துவிட்டது. எனவே அந்த சுவரை முழுமையாகச் சுத்தம் செய்து வெள்ளை அடித்து, மீண்டும் திருக்குறள் வாசகம் இடம் பெற வேண்டும் என ஆதரவாளர்களிடம் கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: “பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” : RS.பாரதி அறிவுறுத்தல்!