Tamilnadu
"அரசுத்துறை கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
“அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசுத் துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்” என்று பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் சர்வதேசதரத்தில் பொது நூலகம்!
இந்த ஆய்வுக்கூட்டத்தில், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசுத் துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் உரிய காலத்தில் கட்டி முடித்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நினைவகம் ஆகியவற்றை அமைப்பது குறித்தும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள சென்னை, வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, அங்கு ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் அமைத்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கட்டிடப் பணிகளை விரைந்து முடித்திடுவீர்!
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரமுடித்திட அறிவுறுத்தினார்.
கீழடி அகழ் வைப்பக கட்டட வளாகம்!
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வைப்பக கட்டட வளாகம் மற்றும் பல்வேறு பாரம்பரியக் கட்டடங்களைப் புனரமைப்பு செய்யும் பணிகள் இவற்றின் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்தும், புதிதாக கட்டப்பட்டுவரும் 6 மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களின் பணி முன்னேற்றம், நீதிமன்றம் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்காக கட்டப்படும் கட்டடங்களின் பணி முன்னேற்றம் சேலம் மாவட்டம், தலைவாசலில் கட்டப்பட்டுவரும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடங்கள்ஆகியவை குறித்தும் ஆய்வு செய்த முதலமைச்சர், அனைத்து அரசுக் கட்டடங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடித்திட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை தலைமை முதன்மைப் பொறியாளர் ஆர்.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!