Tamilnadu
கொங்குநாடு.. பா.ஜ.க B டீம்.. சசிகலா.. “ரொம்ப குடைச்சலா இருக்கு” : OPS-EPS எடுத்த அதிர்ச்சி முடிவு!
செய்தித் தொலைக்காட்சிகள் பலவும் அரசியல் விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவாதங்களில் பங்கு பெறும் கட்சிப் பிரநிதிகள், தலைப்பு சார்ந்து தங்களது கட்சியின் நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் எடுத்துரைக்கின்றனர்.
அ.தி.மு.க-வின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக, அ.தி.மு.க சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பலர், எதிர் தரப்பினர் மற்றும் நெறியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவது வாடிக்கை.
எதிர் தரப்பினரின் நியாயமான கேள்விகளையும், கருத்துகளையும் சமாளிக்க முடியாமல் விவாதத்தைத் திசைதிருப்புவது, தனிநபர் தாக்குதல்களில் இறங்குவது என அ.தி.மு.கவினர் தடுமாறி வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் கேலிக்குள்ளாகும்.
சமீபகாலமாக, பா.ஜ.க கண்ணால் இடும் கட்டளைகளை தலையால் செய்யும் அடிமைகளாக அ.தி.மு.கவினர் இருப்பது குறித்தும், சசிகலாவை தொழுது பதவிகள் பெற்றது குறித்தும் அதிகமாக விமர்சிக்கப்படுவதால் அ.தி.மு.கவினர் திணறி வருகின்றனர்.
மேலும், குறிப்பிட்ட தலைப்புகளில் பேசும்போது, தமிழர்கள் நலனுக்கு விரோதமின்றி பேசுவதாக பா.ஜ.கவின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசவேண்டிய சூழல் ஏற்படுவதாலும் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர் அ.தி.மு.க பேச்சாளர்கள்.
இந்நிலையில், இதுபோன்ற அவமானகரமான நிகழ்வுகளைத் தவிர்க்கும்பொருட்டு, இனிமேல் அ.தி.மு.கவினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
இனி ஊடக விவாதங்களில் அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் பங்கேற்க மாட்டார்கள். எங்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரையும் பேசவைக்கக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் பிரதமர் மோடியையும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சிப்பதால் பா.ஜ.க சார்பாக எவரும் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?