Tamilnadu

“நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தி.மு.க அரசு” : 70 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி பெறும் கிராம மக்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் உள்ள ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல் பாறை, குறவன்குளி, உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதியின்றி தொடர்ந்து சாலை வசதி கோரி போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு சோத்துப்பாறை அணை பகுதியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை புதிதாக சாலை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மலைகிராம மக்கள் ஒன்றாக இணைந்து சோத்துப்பாறை அணை அருகே புதிய சாலை போடுவதற்காக வன தேவதைகளை வழிபட்டு பூமி பூஜை நடத்தினர்.

மேலும் மலை கிராம மக்களின் நூறு ஆண்டுகள் கோரிக்கையான சாலை பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் புதிய சாலை அமைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்த தங்களது ஊராட்சி மன்றத் தலைவருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பங்கேற்று புதிய சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளதை மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Also Read: “அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’.. அதுதான் என் ஆசை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்!