Tamilnadu
சொந்தத் தம்பியையே வெட்டிக் கொலை செய்த அண்ணன்... சேலம் அருகே கொடூரம்!
சேலம் மாவட்டம், தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாயியான இவருக்குச் சீனிவாசன், சுதாகர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தந்தை மாதேஸ்வரனிடம் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த இருவரும் தந்தை முன்னிலையில் நிலத்தை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவேசமடைந்த சீனிவாசன், தம்பி சுதாகரனை வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வெட்டியுள்ளார். இதில் தம்பி சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சுதாகர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அண்ணன் சீனிவாசனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறில் சொந்தத் தம்பியையே அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் மயிலம்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!