Tamilnadu
ஜூலை இறுதிக்குள் +2 மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
வரும் நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மளிகை தொகுப்பினை வழங்கினர். அதனை தொடர்ந்து பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
”இம்மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு போதிய அளவில் கல்வி அளிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.
Also Read: ”PM Cares-ல் வெளிப்படைத்தன்மையே இல்லை” - ஒன்றிய அரசை சாடிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் தெளிவாக தெரிவித்துள்ளது.
எனவே, அதனையும் மீறி தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் பேசி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக உள்ளார். எனவே அதற்கேற்றார் போல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்றுக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!