Tamilnadu
“தமிழ்நாடு அரசின் தொகுப்பு திட்டத்தால் குறுவை சாகுபடியில் புரட்சி ஏற்படும்” : கொறடா கோவி.செழியன் பேட்டி!
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தும் நோக்கிலும், அரிசி உற்பத்தித் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் 100% மானியத்தில் ரசாயன உரம் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கி, குறுவை தொகுப்பு திட்டத்தினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு யூரியா, டி.ஏ.பி, பொட்டாசியம் பசுந்தாள் விதைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோவி செழியன், “டெல்டா மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்குக் குறுவை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக மேட்டூர் அணையை திறந்துவைத்து மட்டும் அல்லாமல் 25 நாட்களுக்குள் குறுவை தொகுப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவை அடுத்து விவசாயிகளுக்குக் குறுவை சாகுபடிக்கான தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறுவை சாகுபடியில் புரட்சி ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு சாகுபடி சிறப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின், திருவிடைமருதூர் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபா திருநாவுக்கரசு, துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!