Tamilnadu

ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 15 நாளில் ஸ்மார்ட் காட்ர்டும் தரப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்!

சென்னை முகப்பேரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் பல் மருத்துவமனையை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை  உடனிருந்தார்.

பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது...

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும்போது ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கை காரணமாக தொற்று தற்பொழுது பெரிதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வம் மிகுதியாக உள்ளது. ஆகவே ஒன்றிய அரசு தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை ஏற்று அதிக அளவில் தடுப்பூசியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.

ஒன்றிய தொகுப்பில் இருந்து உணவு துறைக்கு மானியமாக 3600 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் பிரதமரை சந்தித்து நிலுவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கூடிய விரைவில் இத்தொகை பெற்ப்பட்டு உபயோகப்படுத்தப்படும்

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஸ்மார்கார்ட் வழங்கப்படும்.