Tamilnadu
“எழும் கதிரவன் என்றும் மறைவதில்லை” : கழக அரசு இரவு பகலெனப் பாராது உழைப்பதை புகழ்ந்துரைக்கும் கார்ட்டூன் !
வலைதளங்களில், மேற்காணும் கார்ட்டூனும் -“RISING SUN NEVER SETS” எனும் தலைப்பிட்டு, அதன் கீழே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களும் கொண்ட பதிவொன்று, வைரலாகப் பரவி வருகிறது.
தமிழகத்தின் மேன்மைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவர்கள் தலைமையிலான கழக அரசும் இரவு பகலெனப் பாராது பாடுபடுவதைப் புகழ்ந்துரைக்கும் வரிகள் அவை!
அதன் தமிழாக்கம் இதோ : “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அரசு நிர்வாக இயந்திரம் அதிவேகமாக சுற்றிச் சுழன்று செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் புதிய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள், எந்த நேரத்திலும் பணியாற்றிட அதிகாரிகளை வலியுறுத்தி, செயல்படச் செய்கிறார்.
தற்போதெல்லாம் இரவு 1.30 மணி அளவில்தான் உறங்கச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் விழித்துக் கொள்கிறார். பிறகு சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு, காலை 5.30 மணிக்கெல்லாம் பணியாற்றப் புறப்படுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமல்ல, அவரது அமைச்சர்களும் காலம்பாராது பணியாற்றுகிறார்கள்.
“தங்களுக்கு உழைத்திட ஒருநாளில் 24 மணி நேரம் போதவில்லை” எனும் முனகல் ஓசை, தலைமைச் செயலக வளாகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!