Tamilnadu

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு எங்கள் மயிலாப்பூர் திட்டம் தொடக்கம் - லோகோவை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகையை வழங்கிய பின்னர்

"எங்கள் மயிலாப்பூர்" திட்டத்திற்கான லோகவை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் உரையாற்றிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் மன்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. முதலமைச்சர் கூறியது போல் எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தமடைவார்கள் என்று கூறியதற்கு ஏற்ப ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேகமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தினோம்.

3-வது அலை வராக்கூடாது, வர விடமாட்டோம் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான்.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ சேவை முகாமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் குதிரைகளுக்கு தேவையான தீவனங்களை வழங்கினர்.

Also Read: செங்கல்பட்டில் தடுப்பூசி நிறுவனம் எங்கு இருக்கிறது என OPSக்கு தெரியுமா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி