Tamilnadu

“என் சாவுக்குக் கணவர் குடும்பமே காரணம்” : வரதட்சணை கொடுமையா ? - புதுபெண் தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை !

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. இவருக்கும் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் கணவர் பாலமுருகனும், தாயார் அம்சாவும் சேர்ந்துக் கொண்டு, “கடன் வாங்கி வீட்டை வாங்கியுள்ளோம். எங்களுக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொடு" என கூறி ஜோதிஸ்ரீயை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த ஜோதிஸ்ரீ கடந்த டிசம்பவர் பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டார். பின்னர் ஏப்ரல் 4ம்தேதி மீண்டும் ஜோதிஸ்ரீ கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாமியார் அம்சா வீட்டுக்குள் அவரை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, முதல் மாடியில் இருக்கும் தனது அரைக்கு ஜோதிஸ்ரீ சென்றுள்ளார். அப்போது மாமியார் அந்த அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தற்கொலைக்கு முன்பு ஜோதிஸ்ரீ எழுதிய கடிதத்தில், எனது சாவுக்கு கணவர் பாலமுருகனும், மாமியார் அம்சா மற்றும் குடும்பத்தினரே காரணம் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கை திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வந்ததில், ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் அம்சா, அண்ணன் சத்தியராஜ் ஆகியோர் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: குடி போதையில் பெட்ரோல் பங்க்கில் அராஜகம்; பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகரின் மகன் அதிரடி கைது!